புரோட்டின் லட்டு

kuttybabuPPT
0
புரோட்டின் லட்டு 

தேவையானவை 

வெள்ளை அவல் -  அரை கப்

 பொட்டுக்கடலை - அரை கப் 

தேங்காய் துருவல் - அரை கப்

 வேர்க்கடலை - கால் கப் 

வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்

 துருவிய வெல்லம் - ஒன்றரை கப்

 நெய் - ரெண்டு டேபிள்ஸ்பூன்

 சீவிய பாதாம் முந்திரி தலா - ஒரு டீஸ்பூன் 

செய்முறை 

ஒரு வெறும் வாணிலயில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய் துருவல் முதலியவற்றை தனித்தனியாக வறுத்து ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அனைத்தையும் போட்டு நைசாக பொடியாக்கவும் .

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி முடித்து வைத்துள்ள மாவை சேர்த்து நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை போட்டு வறுத்தமாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாக பிடிக்கவும் .
மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)