பலா கொட்டை கருவாடு தாலுசா

kuttybabuPPT
0
பலா கொட்டை கருவாடு தாலுசா

தேவையான பொருட்கள் 

கருவாடு - 100 கிராம் 

பலாக்கொட்டை - 150 கிராம்

 கத்திரிக்காய் - பெரியது ஒன்று

 முருங்கைக்காய் - ஒன்னு 

துவரம் பருப்பு - நூறு கிராம்

 கடலைப்பருப்பு - 100 கிராம்

 வெங்காயம் - 150 கிராம் 

தக்காளி - நாலு 

பட்டை லவங்கம் பிரியாணி இலை தாளிக்க -  தேவையான அளவு 

இஞ்சி பூண்டு விழுது - மூன்று டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 புளிக்கரைசல் - ஒரு குழி கரண்டி

எண்ணெய் - இரண்டு குழி கரண்டி

 உப்பு - தேவையான அளவு

 கருவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கொத்து 

செய்முறை 

முதலில் கருவாட்டை சுடுநீரில் அலசி எடுத்து வைக்கவும்.

 பலாக்கொட்டையை உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.

 வேகவைத்த பலாக்கொட்டையை தோல் உரித்து நீளமாக நறுக்கவும்.

 துவரம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் தக்காளியை நன்கு வேகவைத்து மசிக்கவும் .

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

 முருங்கைக்காயையும் விரல் நீளத்திற்கு வெட்டவும்.

 பின்பு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், பிரியாணி இலை தாளித்து நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

 அதில் நறுக்கி வைத்த கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு நன்கு வதக்கவும்.

மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் , உப்பு தண்ணீர் சேர்த்து காய்களை நன்கு வேக வைக்கவும்.

 வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றவும்.

 பிறகு வேக வைத்த பருப்பு, பல கொட்டை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.

 கரம் மசாலா சேர்க்கவும் .

நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து கருவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
 சுவையான பலாக்கொட்டை கருவாடு தால்சா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)