தேவையானவை
மாங்காய் - 2
சர்க்கரை - 5 ஸ்பூன்
பொடித்த வெல்லம் - அரை கப்
மில்க்மெய்டு - மூன்று டேபிள் ஸ்பூன்
பால் - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
ஏல பொடி - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - சிறிதளவு
முந்திரி, பாதாம் - தலா 5
செய்முறை
மாங்காயை தோல் சீவி மிக்ஸியில் போட்டு அரைத்து கூழ் ஆக்கவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை மாங்காய்க்குள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
பிறகு அதில் பால், மில்க் மைட், ஏலப்பொடி , குங்குமப்பூ போட்டு நெயில் வருத்த முந்திரி, பாதாம் போட்டால் மாங்காய் கீர் ரெடி.