காராமணி கலக்கல் சுண்டல்

kuttybabuPPT
0
காராமணி கலக்கல் சுண்டல்

தேவையானவை 

வெள்ளை காராமணி - ஒரு கப்

 நறுக்கிய வெங்காயம் - 6 டேபிள்ஸ்பூன் 

கேரட் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்

 அரிசி பொரி - நான்கு டேபிள் ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 அரிந்த குடைமிளகாய் - இரண்டு டேபிள் ஸ்பூன் 

தக்காளி - ஒன்று

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 உப்பு, எண்ணெய் - தேவைக்கு

 கடுகு - ஒரு டீஸ்பூன் 

மல்லித்தழை - அலங்கரிக்க

 எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

 செய்முறை

வெள்ளை காராமணியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு உப்பு சேர்த்து குலைய விடாமல் வேக வைக்கவும்.

 வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் போட்டு காராமணியும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.

 அந்த சூட்டிலேயே அரிந்த வெங்காயம், தக்காளி, அரிந்த குடைமிளகாய், கேரட் துருவல், அரிசி பொரியென அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
 காராமணியும் இதர காய்கறிகளும் மூளையின் நரம்புகளை தூண்டி நியாபக சக்தியை அதிகரிக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)