தேவையானவை
பால் - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
துருவி தேங்காய் துருவியது - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - ஒரு கப்
ஏல பொடி - கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு தட்டில் நெய்யை தூவி வைக்கவும் .
ஒரு கடாயில் முதலில் கடலைமாவை மிதமான தீயில் லேசாக வறுத்து எடுக்கவும் .
அடுத்து பால், தேங்காய், நெய், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும் .
நன்றாக கெட்டியானதும் கையில் எடுத்துப் பார்த்தால் உருட்ட வந்தால் இறக்கிவிட்டு ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரே சமமாக பரப்பி கத்தியில் துண்டுகளாக்கவும்.