துவரம் பருப்பு இட்லி

kuttybabuPPT
0
துவரம் பருப்பு இட்லி

தேவையானவை 

புழுங்கல் அரிசி - இரண்டு கப்

 வெந்தயம் - இரண்டு தேக்கரண்டி

 துவரம் பருப்பு - ஒரு கப் 

காய்ந்த மிளகாய் - எட்டு 

சீரகம் - ஒரு தேக்கரண்டி

 முருங்கைக்கீரை - கால் கப் 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை

அரிசி, துவரம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். 

மிளகாய், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.

 இதை அரை மணி நேரம் புளிக்க வைக்கவும்.

 பிறகு முருங்கைக் கீரையை சேர்த்து இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வார்க்கவும் .

பயன்கள் 

 துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டின், போலிக் ஆசிட் மற்றும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
 மேலும் இதில் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராக இருந்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)