மிளகு அடை

kuttybabuPPT
0
மிளகு அடை 

தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி - ஒரு கப் 

பச்சரிசி -  அரை கப் 

கருப்பு உளுந்து உடைத்தது - கால் கப்

 மிளகுத்தூள் - மூன்று டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் 

கருவேப்பிலை - 20 இலைகள்

 தேங்காய் துருவல் - ஒரு கப் 

தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும் .

ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

 பின் தண்ணீரை வடிகட்டவும்.

 மிக்ஸி ஜாரில் வடிகட்டி அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும் .

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும் .

ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கலக்கவும் .

அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

 தோசை கல் சூடானதும் ஒன்றரை கரண்டி மாவை எடுத்து தோசை போல் இடவும் .

தேங்காய் எண்ணெயை சுற்றி விடவும்.
 அடை பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)