தேவையான பொருட்கள்
துருவிய பூசணி - நான்கு கப்
பால் - அரை டம்ளர்
நெய் - ரெண்டு ஸ்பூன்
சர்க்கரை - ஒன்னரை கப்
முந்திரி திராட்சை - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு துருவிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும் .
அதன் பச்சை வாசனை போன பின்பு பால் சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும் .
பூசணிக்காய் வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கரையவிடவும்.
பின் இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக கிளறினால் சுவையான பூசணி அல்வா தயார் .
கூடுதல் சுவைக்கு நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து அல்வாவில் கிளறியும் சாப்பிடலாம்.