தேவையானவை
வேகவைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
தக்காளி - 600 கிராம்
வேக வைத்த பச்சை பட்டாணி - 50 கிராம்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
தக்காளியை வேக வைத்து தோல் உரித்து விதையை எடுத்துவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, பட்டாணியை வேகவைத்து மிதமாக மசித்து கொள்ளவும் .
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் சீரகம் தாளித்துவிட்டு பச்சை மிளகாய் போடவும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி போட்டு கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இதில் உருளை, பட்டாணி போடவும்.
உப்பு போட்டு கிளறியதும் தக்காளி விழுதை கொட்டி மிதமான தீயில் வைக்கவும்.
நன்கு கொதிக்க விட்ட பின்பு இறக்கி சுடசுட ஆளு மட்டர் சப்ஜியை பரிமாறலாம்.
பயன்கள்
உருளையை தோலுடன் உண்பதால் நார்ச்சத்து உடம்பில் சேருகிறது.
மற்ற காய்கறி உடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது.
இதனை வறுத்து உண்பதை விட வேகவைத்து உண்பதே நல்லது.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.