தேவையானவை
நெத்திலி கருவாடு - 250 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - நாலு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - இரண்டு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
கருவேப்பிலை - சிறிது
செய்முறை
கருவாட்டை சுடு தண்ணீர் நன்றாக சுத்தம் அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
தனியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து குறைவான சூட்டில் வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இறுதியில் கருவாட்டை சேர்த்து ஐந்து நிமிடம் வரை பிரட்டி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து சுவை பார்த்து இறக்கினால் ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.