மசாலா மோர்

kuttybabuPPT
0
மசாலா மோர்

தேவையான பொருட்கள் 

கெட்டி தயிர் - இரண்டு கப்

 தண்ணீர் - இரண்டு கப்

 கொத்தமல்லி - நான்கு டீஸ்பூன் 

மோர் மிளகாய் - ரெண்டு 

உப்பு - தேவையான அளவு 

தாளிக்க 

எண்ணெய் - ரெண்டு ஸ்பூன் 

கடுகு - கால் டீஸ்பூன் 

பெருங்காயம் - கால் டீஸ்பூன் 

அரைக்க 

பச்சை மிளகாய், கருவேப்பிலை - ஆறு இலை 

இஞ்சி - 1/4 இன்ஞ்

 செய்முறை 

முதலில் இரண்டு கப் தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

 பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

 இதன் பின்னர் மிக்ஸி எடுத்து அதில் பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .

அதை எண்ணெயில் மோர் மிளகாயை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

 பின்னர் முன்பு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை மோரில் சேர்த்துக் கொள்ளவும் .
மோர் மிளகாயை உடைத்து போட்டு தாளித்ததையும் ஊற்றி கொத்தமல்லியை தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .

சில்லென மசாலா மோர் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)