தேவையான பொருட்கள்
தோசை மாவு - இரண்டு கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
குடைமிளகாய் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
கேரட்டை துருவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும்.
தோசை கல்லில் தோசை மாவை விட்டு அதன் மேலே வதக்கிய காய்களை சிறிதளவு சேர்த்து சுற்றிலும் நெய் விடுவோம்.
தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுக்கவும்.
ஆரோக்கியமான வெஜ் தோசை தயார்.