தேவையான பொருட்கள்
கொழுப்பு நீக்காத பால் - நாலரை கப்
சாதாரண பால் - கால் கப்
குங்குமப்பூ - கால் டீஸ்பூன்
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
செய்முறை
சிறிதளவு பாலில் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்கவும் .
கால் கப்பு பாலில் சோள மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
அகழமான நான்ஸ்டிக் கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
பால் கொதிக்கும் போது அதில் சோள மாவு கரைசல் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
20 நிமிடங்களுக்கு கட்டிகள் உருவாகாமல் தொடர்ந்து கிளறவும்.
பால் சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
பின்பு அதில் குங்குமப்பூ கரைசலை ஊற்றி கலக்கவும்.
இந்தக் கலவையை குல்பி மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் நான்கு மணி நேரம் வைக்கவும்.