ஆப்பிள் அல்வா

kuttybabuPPT
0
ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள்

 இனிப்பு ஆப்பிள் - ரெண்டு 

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

 குங்குமப்பூ - சிறிதளவு .

பாதாம் பிஸ்தா துருவியது - 2 டீஸ்பூன்

 உலர் திராட்சை - 10

 முந்திரி - அஞ்சு

 ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிகை

 செய்முறை 

முதலில் ஆப்பிள் எடுத்துக் கொண்டு அதன் தோலை சீவி துருவிக் கொள்ளவும் .

பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை குறைத்து பொன்னிறமாகும் வரை பொறுமையாக வதக்கவும்.
 பிறகு சர்க்கரை மீதமுள்ள நெய் சேர்த்து வதக்கி நன்கு திரண்டு வரும்போது பாதாம் , பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ அடர்த்தியும் சேர்த்து புரட்டி விட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பை குறைத்து வைத்து இறக்கினால் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)