ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்

kuttybabuPPT
0
ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்

தேவையானவை 

ஜவ்வரிசி சேமியா -  தலா ஒரு கைப்பிடி 

பால் - ஒரு லிட்டர் 

சர்க்கரை - கால் கப் 

லிக்விட் குளுக்கோஸ் - இரண்டு டேபிள் ஸ்பூன் 

குல்பி மோல்ட் அல்லது சின்ன சைஸ் டம்ளர் - எட்டு 

ஐஸ்கிரீம் குச்சிகள் - எட்டு

 செய்முறை 

பாலை சுண்ட காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆற விடவும் .

வெறும் வாணிலயில் ஜவ்வரிசியை லேசாக வறுத்து நன்றாக வேகவிட்டு வடிகட்டவும்.

 சேமியாவை தனியாக வேக வைத்து நீரை வடிகட்டி வைக்கவும் .

பால் ஆறியதும் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும் .
பின்னர் லிக்விட் குளுக்கோசை சேர்த்து நன்றாக கலந்து குல்பி மோல்ட் அல்லது டம்ளர்களின் ஐஸ்கிரீம் குச்சியை வைத்து அதில் பால் கலவையை ஊற்றவும் பின்னர் அதை ஃபிரீஸரில் 8 மணி நேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)