தேவையானவை
கருப்பு அல்லது வெள்ளை கொண்டை கடலை - 100 கிராம்.
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - மூன்று பற்கள்
பச்சை மிளகாய் - ஒன்று
பிரியாணி இலை - ஒன்னு
சோம்பு - அரை டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐந்து
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கொண்டை கடலையை 7 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை , சோம்பு போட்டு வதக்கவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் வேகவைத்த கடலையை சேர்க்கவும் .
மசாலாக்கள் கடலை உடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் .
தேங்காய் துருவலுடன் முந்திரி பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து குழம்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சிவப்பரிசி புட்டுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ் இது.