தேவையான பொருட்கள்
தக்காளி - மூன்று
இஞ்சி - ஒரு இன்ச்
மிளகு - அரை டீஸ்பூன்
கிராம்பு - ரெண்டு
வரமிளகாய் - 3
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாாணலியை அடுப்பில் வைத்து அதில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
பின் அதில் வரமிளகாய், கிராம்பு, மிளகு, பெருங்காயத்தூள் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி வெண்மையாகும் வரை ஆறு முதல் ஏழு நிமிடங்கள் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதே வாணிலை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி மூன்று முதல் நான்கு நிமிடங்கள் குறைவான தீயில் கிளறி இறக்கினால் தக்காளி சட்னி ரெடி.