தேவை
கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒன்று
மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் இஞ்சி, மிளகாய் , உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும் .
அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு கலக்கவும்.
இந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொறித்தால் சுவையான மசால் வடை தயார்.