சத்துமாவு வடை

kuttybabuPPT
0
சத்துமாவு வடை 

தேவையானவை 

சத்துமாவு - 100 கிராம் 

முளைகட்டிய சோளம் , முளைகட்டிய கொள்ளு , முளைக்கட்டிய கருப்பு உளுந்து, முளைகட்டிய கொண்டைக்கடலை - தலா ரெண்டு
 டேபிள் ஸ்பூன் 

இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

உரித்த பூண்டு பற்கள் - நான்கு

 பச்சை மிளகாய் -  ரெண்டு

 புதிதாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் 

எண்ணெய் - 200 ml 

உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

அகலமான பாத்திரத்தில் முளைகட்டிய சோளம், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை, உப்பு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக கலந்து கொள்ளவும்.

 அகலமான பேசனில் கரைத்த மாவை போட்டு நறுக்கிய வெங்காயம், சத்துமாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் .

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

 எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவை சிறியதாக உருட்டி வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
 சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)