தேவையானவை
வாழைக்காய் - இரண்டு
ரவை - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
பெருங்காய பொடி - அரை ஸ்பூன்
இஞ்சி - அரை இன்ச்
பச்சை மிளகாய் - ஆறு
வெங்காயம் - 100 கிராம்
கடலைப்பருப்பு - ஒரு கரண்டி
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு வடித்துக் கொள்ளவும்.
எண்ணெய் தவிர எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
வாணிலையில் எண்ணெய் காய விட்டு கொண்டு இந்த மாவை வடையாகத் தட்டி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.