தேவையானவை
ஜவ்வரிசி , பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்
வரமிளகாய் - நான்கு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் பொடிதாக நறுக்கியது - ஒன்னு
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசி, பருப்புகளை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
மிளகாய், சோம்பு, உப்பை பொடிக்கவும் .
அதனுடன் அரிசி பருப்பு, ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும் .
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை காயவைத்து கடுகு தாளிக்கவும் .
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் .
பின்னர் தேங்காய் துருவலை போட்டு பிரட்டி அரைத்த மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து சிறிய குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும் .
இருபுறமும் திருப்பிவிட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து தேங்காய் சட்னி கதம்ப சட்னியுடன் பரிமாறவும்.
அருமை 👌💐💐
ReplyDelete