வெஜ் சாண்ட்விச்

kuttybabuPPT
0
வெஜ் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் 

வெண்ணை - இரண்டு டீஸ்பூன்

 இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒன்று

 தக்காளி நறுக்கியது - ஒன்று 

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் 

பாவ் பாஜி மசாலா - அரை டீஸ்பூன்

 சீரகப்பொடி - அரை டீஸ்பூன்

 கேரட், குடைமிளகாய், மஞ்சள் தூள் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

 உருளைக்கிழங்கு உப்பு போட்டு வேகவைத்து மசித்தது - ரெண்டு

 சாட் மசாலா - அரை டீஸ்பூன்

 கொத்தமல்லி - சிறிதளவு

 பிரட் - தேவையான அளவு

 செய்முறை 

ஒரு பானில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

 வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் .

பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து தக்காளியை குழைய வதக்க வேண்டும் .

 வதங்கியதும் அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து மசாலா வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

 பிறகு நறுக்கிய கேரட், குடைமிளகாய் சேர்த்து வேகம் அளவிற்கு வதங்கி வர வேண்டும் .

அதில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் இரண்டு முதல் மூன்று நிமிடம் அப்படியே வைக்கவும்.

 வெந்ததும் அடுப்பை நிறுத்தி சாட் மசாலா சேர்த்து கலந்து விடவும்.

 பின்னர் பிரட்டில் வெண்ணையை இரு பக்கமும் தடவி , செய்து வைத்துள்ள மசாலாவை ஸ்டஃப் பண்ணி தோசை கல்லில் சிறிதளவு வெண்ணை சேர்த்து பிரண்டை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.
 இப்பொழுது சுவையான வெஜ் சாண்ட் வெஜ் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)