பன்னீர் ரோல்

kuttybabuPPT
0
பன்னீர் ரோல்
தேவையான பொருட்கள் 

மேல் மாவு தயாரிக்க 

மைதா அல்லது கோதுமை மாவு - இரண்டு கப் 

உப்பு - அரை டீஸ்பூன்

 சர்க்கரை - அரை டீஸ்பூன்

 பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன் 

பால் - ஒரு கப் 

எண்ணெய் - தேவையான அளவு

 மசாலா தயாரிக்க 

பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கியது - இரண்டு கப் 

வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் 

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது - இரண்டு 

காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

 தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் 

கொத்தமல்லி தலை - ஒரு கைப்பிடி

 புதினா சட்னி - அரை கப் 

தக்காளி சாஸ் - கால் கப்

 எலுமிச்சம்பழச் சாறு - கால் கப்

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

அகலமான பாத்திரத்தில் மாவை கொட்டி அதனுடன் உப்பு , சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும் .

பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசயவும்.

 தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.

 இப்போது ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவு மென்மையாக மாறும் அளவுக்கு அடித்து பிசையவும்.

 பின் பிசைந்த மாவை 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

 ஒரு வாணிலையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் வதக்கவும் .

பின்பு குடைமிளகாய் ,வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்க வேண்டும் .

பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு கலக்கவும் .

அடுத்து பன்னீரை சேர்த்து லேசாக கிளறவும் .

பன்னீர் பாதி வெந்தால் போதும் .

பிறகு அதில் கொத்தமல்லி தலையை தூவி கிளறி இறக்கவும்.

 இப்போது பிசைந்து வைத்திருக்கும் மாவு எடுத்து உருண்டைகள் செய்து அவற்றை மெல்லிய வட்டமாக திரட்டி கொள்ளுங்கள்.

 அதன் மீது லேசாக வெண்ணை அல்லது எண்ணெய் தடவி சிறிது உலர் மாவை தூவுங்கள்.

 ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த மாவை கைகளால் அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளுங்கள்.

 பின்னர் மீண்டும் வட்ட வடிவமாக திரட்டிக் கொள்ளுங்கள் .

அதை சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக சுட்டு எடுங்கள் .

அதன் மீது ஒரு டீஸ்பூன் புதினா சட்னியை தடவும்.

 பிறகு சிறிது தக்காளி சாஸ் ஊற்றி பன்னீர் மசாலாவை நடுவில் வைக்கவும் .

அதன் மேல் சிறிது எலுமிச்சம் பழ சாற்றை தெளிக்கவும் .

இப்போது இதனை மெதுவாக சுருட்டவும் .
சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இந்த ரோலை அதன் மேல் வைத்து சூடு படுத்தினால் சுவையான பன்னீர் ரோல் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)