கற்பூரவள்ளி பஜ்ஜி

kuttybabuPPT
0
கற்பூரவள்ளி பஜ்ஜி

தேவையான பொருட்கள்

கற்பூரவள்ளி இலைகள் - தேவைக்கு ஏற்ப

 கடலை மாவு -  200 கிராம்

 அரிசி மாவு - 50 கிராம் 

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

 சீரகம் - ஒரு தேக்கரண்டி

 பெருங்காயம் - கால் தேக்கரண்டி

 சமையல் சோடா  - கால் தேக்கரண்டி

 எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை

கற்பூரவள்ளி இலைகளை நன்றாக சுத்தப்படுத்தவும்.

 ஒரு அகற்ற பாத்திரத்தில் கடலைமாவு,  அரிசி மாவு, சீரகம், பெருங்காயம்,  மிளகாய்த் தூள் , சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.

 பின்பு அதில் சமையல் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கற்பூரவல்லி இலைகளை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் இரண்டு முறை தோய்த்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)