தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - தலா 10
தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
அரிசி ,சீரகம் - தலா இரண்டு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - மூன்று
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மஞ்சள் தூளைத் தவிர மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் வெறும் வாணிலையில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க சுவையான மாேர் குழம்பு பொடி தயார்.
மோர் குழம்பு செய்யும் போது தாளிக்க வேண்டிய பொருள்களை தாளித்தவுடன் தேவையான அளவு அதில் தண்ணீர் ஊற்றி இந்த பொடியை தேவையான அளவு சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விட்டு பிறகு கெட்டி தயிரை சில பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அடிக்க வேண்டும்.
பின்னர் வாணிலையில் ஊற்றி தேவையான அளவு உப்பை சேர்த்து இரண்டு கொதி வர இறக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தாளிக்க மோர் குழம்பு தயார்.
எப்போதும் அடித்த தயிரை இறுதியில் தான் சேர்க்க வேண்டும் .
இல்லை என்றால் மோர் குழம்பு திரிந்து போகும்.