பீட்ரூட் ரசம்

kuttybabuPPT
0
பீட்ரூட் ரசம்
தேவையான பொருட்கள்

பீட்ரூட் - ஒன்னு 

தக்காளி - ஒன்னு 

சீரகம் - ஒரு டீஸ்பூன் 

மிளகு - அரை டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 

உப்பு - தேவையான அளவு 

தாளிக்க 

தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 கடுகு - கால் டீஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைக்கவும் .

அதன் பிறகு தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

 இவை அனைத்தையும் ஒரு வாணிலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு கலந்து நன்கு கொதிக்க விடவும் .

பிறகு வாணலியை ஸ்டவில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்
 அவ்வளவுதான்.
 தயாரான பீட்ரூட் ரசத்தில் பொடியாக நறுக்கிய மல்லி இலையை தூவினால் கூடுதல் சுவையாகவும் இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)