பன்னீர் புலாவ்

kuttybabuPPT
0
பன்னீர் புலாவ் 
தேவையானவை

 பன்னீர் - 250 கிராம்

 உதிரியாக வடித்த சாதம் - இரண்டு கப்

 தக்காளி, வெங்காயம் நறுக்கியது தலா - ஒன்று

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 பட்டை - சிறிய துண்டு

 கிராம்பு , ஏலக்காய் தலா -  இரண்டு

 பிரியாணி இலை - ஒன்று

 பச்சை மிளகாய் -  4 

நெய் - ஒரு டீஸ்பூன்

 புதினா, கொத்தமல்லி , எண்ணெய், உப்பு   - தேவையான அளவு

 செய்முறை 

முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

 இதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

 பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்.

 சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.

 பன்னீர் துண்டுகளை சதுரமாக வெட்டி சேர்க்கவும்.

 கலவை சேர்ந்து வரும்போது சாதத்தை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
 கடைசியாக மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பன்னீர் புலாவ் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)