தேவையானவை
மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
சர்க்கரை - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
பூரணம் செய்ய
நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
சாதிக்காய் பொடி - அரை டீஸ்பூன்
வெள்ளரி விதைகள் - ஒரு டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
கோவாவுடன் சமையல் சோடா, உப்பு, மைதா, நெய் சேர்த்து தேவையான நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் .
சர்க்கரையில் சிறிது நீர் விட்டு கம்பி பாகாக காய்ச்சவும்.
பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் கிண்ணம் செய்து உள்ளே பூரணம் வைத்து மூடவும் .
சூடான எண்ணெயில் இதை பொரித்து எடுக்கவும்.
பிறகு சர்க்கரை பாகில் போடவும்.
நன்றாக ஊறியதும் எடுத்து சாப்பிடவும்.