தேவையானவை
வல்லாரைக் கீரை - ஒரு கிண்ணம்.
பூண்டு - இரண்டு பல்
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்
காய்ந்த மிளகாய் - ஐந்து
எலுமிச்சை சாறு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு வல்லாரைக் கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் .
அதனுடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும் .
அரைத்த விழுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும் .
பலன்கள்
வல்லாரை கீரையானது ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
வல்லாரைக் கீரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் .
வல்லாரைக் கீரை தொண்டை கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது.
உடல் சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி சிரங்கு படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும் .
புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும் .
அப்போதுதான் இதன் முழு பலனும் கிடைக்கும்