தாமரை விதை இளநீர் பாயாசம்

kuttybabuPPT
0
தாமரை விதை இளநீர் பாயாசம்

 தேவையான பொருட்கள் 

தாமரை விதை - 100 கிராம் 

இளநீர் - 200 மில்லி லிட்டர் 

தேங்காய் பால் - ஒரு கப் 

முந்திரி - பத்து

 சாரப்பருப்பு - ஒரு டீஸ்பூன் 

திராட்சை - 10 

ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்

 நெய் - 2 டீஸ்பூன் 

நாட்டு சர்க்கரை - 150 கிராம்

 செய்முறை 

தாமரை விதையை நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும் .

ஆறியதும் அதில் சிறிது எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்த பொடியை 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் .

அதில் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும் .

நாட்டு சர்க்கரை கரைந்ததும் இளநீரில் வழுக்கை தேங்காய் இருந்தால் அதையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் .

பிறகு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி , சாரப்பருப்பு , திராட்சை தாளித்து சேர்க்கவும்.

 மீதமிருக்கும் தாமரை விதையை முழுதாக சேர்க்கவும் .
சுவையான தாமரை விதை இளநீர் பாயாசம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)