பனை ஓலை கொழுக்கட்டை

kuttybabuPPT
0
பனை ஓலை கொழுக்கட்டை

 தேவையான பொருட்கள் 

நறுக்கிய பனை ஓலை - 15 துண்டுகள்

 அரிசி மாவு - ஒரு கப்

 துருவிய தேங்காய் - அரை கப்

 பாசிப்பருப்பு - கால் கப்

 ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்

 வெல்லம் அல்லது கருப்பட்டி - முக்கால் கப் 

தண்ணீர் - ஒரு கப் 

சுக்கு பொடி - அரை டீஸ்பூன்

 செய்முறை 

பச்சரிசியை ஊற வைத்து நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்.

 பனை இலைகளை சுத்தம் செய்து நான்கு அங்குலம் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

 ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், சுக்கு பொடி, தேங்காய் துருவல், பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ளலாம்.

 கருப்பட்டி அல்லது வெல்லத்தை இளம் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி மாவுடன் கெட்டியாக பிசையவும் .

அந்த மாவை ஓலையில் இடையில் வைத்து மடக்கி ஓலை நார்கொண்டு கட்டி வைக்க வேண்டும்.

 மொத்த மாவையும் இவ்வாறு செய்த பிறகு ஒரு இட்லி பானையில் வைத்து 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும் .
சுவை, மணம் நிறைந்த சத்தான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)