தேவையான பொருட்கள்
காடை முட்டை - இருபது
வெங்காயம் - 3
பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்
தக்காளி - இரண்டு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இடிச்ச மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகுத்தூள் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் - ஒன்னு
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு பிடி
செய்முறை
இட்லி தட்டில் எண்ணெய் தடவி முட்டைகளை அப்படியே ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வானிலை வைத்து ஊற்றி கருவேப்பிலை தாளித்து சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியை பெரிய துண்டுகளாக சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு பூண்டு விழுது சேர்த்து ஒரு முறை பிரட்டி தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும் .
இப்போது முட்டை துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அனலை குறைத்து இடிச்ச மிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான காரசாரமான காடை முட்டை இட்லி மசாலா தயார்.