தேவையானவை
துருவிய மரவள்ளி கிழங்கு - ஒரு கப்
இட்லி அரிசி - அரை கப்
கடலைப்பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
வெல்லம் - அரை கப்
சுக்கு பொடி , ஏல பொடி - தலா அரை டீஸ்பூன்
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசி, பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கிழங்குடன் சேர்த்து அரைத்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து, சற்று அரைத்த வெல்லம் தூள் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து கலந்து பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு குழியில் பாதி அளவு மாவை ஊற்றி வந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
அரைத்தவுடன் சுடலாம்.