கொல்லி கருவாட்டு குழம்பு

kuttybabuPPT
0
கொல்லி கருவாட்டு குழம்பு

 தேவையான பொருட்கள் 

கொல்லி கருவாடு - 100 கிராம் 

பச்சை பயறு - 50 கிராம் 

கத்தரிக்காய் - 100 கிராம் 

கடுகு - தாளிக்க 

எண்ணெய் - ஒரு குழி கரண்டி 

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

 தனியா தூள் - இரண்டு தேக்கரண்டி

 புளி - நெல்லிக்காய் அளவு 

சின்ன வெங்காயம் - 100 கிராம்

 தக்காளி - 2

 தேங்காய் - அரை மூடி

 பொட்டுக்கடலை - இரண்டு தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

மொச்சை பயிரை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 கருவாட்டை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு அலசி வைக்கவும்.

 தேங்காய், தக்காளி, பொட்டுக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் அனைத்தையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

 அரைத்த விழுதை மொச்சை பயிரில் போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

 இதில் புளி கரைசலை ஊற்றவும்.

 நன்றாக கொதித்ததும் கருவாடு போட்டு பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும் .

கொல்லி கருவாட்டு குழம்பு தயார்.
 கம்பஞ்சோற்றுடன் கொள்ளிக்கருவாட்டுக் குழம்பு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)