தேவையானவை
ஆட்டுக்கறி - அரை கிலோ
தேங்காய் பெரியது - ஒன்னு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
பட்டை - இரண்டு இன்ச் அளவு
கிராம்பு , ஏலக்காய் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 15
நெய் - 50 கிராம்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
ஆட்டுக்கறியை கழுவி வைத்துக் கொள்ளவும் .
தேங்காயை மை போல் அரைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு வெடித்த உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கிண்டி கறியையும், உப்பையும் போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழம் , தயிர், தேங்காய், தனியாத்தூள், கொத்தமல்லி தலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குக்கர் மூடியை போட்டு நான்கு விசில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் .
10 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால் ஆட்டுக்கறி நெய் குருமா ரெடி .
இது வெள்ளை கலரில் இருக்கும் கலர் தேவைப்பட்டால் மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளலாம்.