தேவையானவை
முழு பச்சை பயிறு - ஒரு கப் ஊற வைத்தது
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி பூண்டு விழுது - ஒரு
தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - இரண்டு டீஸ்பூன்
உப்பு , எண்ணை - தேவைக்கு ஏற்ப
செய்முறை
ஊறவைத்த பச்சை பயரை தண்ணீரில் மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.
வாணலியை எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
இப்போது பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி மற்றும் அனைத்து மசாலா தூள் களையும் சேர்த்து நன்கு வதக்கவும் .
எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்துள்ள பச்சை பயிரை சேர்த்து உடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
தீயை அணைத்து கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
சூடாக பரிமாறவும் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்றது.