தேவையானவை
பாசிப்பருப்பு - நூறு கிராம்
தேங்காய் பால் - 30 மில்லி
பனைவெல்லம் - 10 கிராம்
சோளமுத்து - எண்பது கிராம்
உப்பு மற்றும் மிளகு - சுவைக்கு ஏற்ப
டெம்பூரா - மாவு 40 கிராம்
சோளம் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் பொறிக்க - 300 மில்லி
இது தொடர்ந்து ஒரு முட்டையின் வெள்ளைக்கரு அடித்துக் கொள்ளவும்.
செய்முறை
பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்து அதில் தேங்காய் பாலுடன் பனை வெல்லத்தை கலக்கவும்.
பிறகு வேகவைத்த சோழ முத்துக்களை அந்த பாசிப்பருப்பில் போட்டு உப்பு மற்றும் மிளகை சேர்க்கவும்.
அதன் பின் மாவை ஒட்டும் பதத்துக்கு வரும் வரை கலக்கவும்.
கலவையை சிறு வட்டமாக உருட்டி கொள்ளவும் .
அந்த முட்டையின் வெள்ளை கருவில் துய்த்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு பொன் நிறமாகும் வரை பிரித்து எடுக்கவும் .
இவ்வாறு பொறித்து எடுக்கும் போது சுவையான சோள உருண்டை ரெடி.