சொதிக் குழம்பு

kuttybabuPPT
0
சொதிக் குழம்பு

தேவையானவை 

தேங்காய் - ஒன்று 

பீன்ஸ் - 5 

கேரட் - ஒன்று 

உருளைக்கிழங்கு - ஒன்று

 முருங்கைக்காய் - ஒன்று

 எலுமிச்சை - ஒன்று

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

அரைத்துக் கொள்ள 

பெரிய வெங்காயம் - ஒன்று

 இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

பச்சை மிளகாய் - மூணு 

சீரகம் - ஒரு டீஸ்பூன் 

வேக வைக்க 

பாசிப்பருப்பு - 20 கிராம் 

தாளிக்க

கடுகு -  ஒரு டீஸ்பூன் 

உளுந்து - 2 ஸ்பூன்

 கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 பெருங்காயம் -  சிறிது

 தேங்காய் எண்ணெய் -  3 ஸ்பூன்

 செய்முறை 

தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும் .

முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

 மீதமுள்ள விழுதில் நீர் ஊற்றி அரைத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாலையும் எடுக்கவும்.

 பீன்ஸை சிறிது நீளமாகவும் , கேரட்டை வட்டமாகவும் நறுக்கவும்.

 உருளை, முருங்கை , பீன்ஸ் போல நறுக்கவும்.

 வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம் காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் மூன்றாவது தேங்காய்ப்பாலை சேர்த்து வேக விடவும் .

காய் நன்றாக வெந்தவுடன் அதில் இரண்டாம் பாலை ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் ஆகிய அரைத்த விழுதை சேர்க்கவும்.

 பிறகு உப்பு சேர்க்கவும்.

 கொதித்து பிறகு வேகவைத்த பால் சேர்க்கவும்.

 கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும் .

ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
 நன்கு ஆறிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)