தேவையான பொருட்கள்
பாலக்கீரை - சிறு கட்டு
பச்சை மிளகாய் - இரண்டு
அரிசி - 200 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - 2 ஸ்பூன்
சீரகம், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கீரையை கழுவி நறுக்கி வேகவைத்து லேசாக மசித்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவலை அரைத்து கீரை உடன் கலந்து அடுப்பில் கொதிக்க விட்டு இறக்கவும்.
அரிசி, பயத்தம் பருப்பை வேகவைத்து அதில் கீரை கலவையை கலந்து நெய்விட்டு கிளறினால் பாலக் ரைஸ் தயார்.
எலும்பு பற்களை உறுதிப்படுத்தும்.
பாலக்கீரை குழந்தைகளுக்கு அவசியமான சத்து உணவாகும்.