கிச்சன் டிப்ஸ்

kuttybabuPPT
0
கிச்சன் டிப்ஸ்

பூரி செய்ய அவை தயாரிக்கும் போது உடனே பயன்படுத்தி விட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெய் குடிக்கும்.

 வெண்ணையில் சிறிது உப்பை தூவி விட்டால் அது அதிக நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

 உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் சிறிது கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ் ஆக இருக்கும் .

சர்க்கரை, பால், நெய், ரவை தலா அரைக்கப் எடுத்து அதனுடன் இரண்டு கப் பால் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடிகனமான வாணிலையில் சேர்த்து கிளறவும்.
 எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி பரிமாற பால் அல்வா தயார்.

 தோசை மாவுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மல்லித் தலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், கருவேப்பிலை சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி நன்கு வெந்ததும் எடுத்து இட்லி பொடி சேர்த்து பரிமாறவும்.

  தேங்காய் க்கு பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும் .

தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாய்க்கு பதில் சிறு துண்டு இஞ்சியும் தண்ணீருக்கு பதில் புளிக்காத மோரும் சேர்த்து செய்ய வெண்மை நிறத்துடன் பளிச்சென்று இருப்பதுடன் நெடுநேரம் கெடாமல் இருக்கும் .

சட்னி செய்யும் போது சிறிது வெள்ளைப் பூண்டு சேர்க்க சுவை கூடும்.
 சின்ன வெங்காயத்தை சட்னி அரைத்து கடைசியாக சேர்க்கும்போது தாளிக்கும் போது அறிந்து சேர்க்க நன்றாக இருக்கும்.

தயிர் அதிகம் புளித்தால் அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்க்கவும். கல்மணி நேரம் கழித்து மேலே தேங்கி உள்ள நீரை அகற்றி விட்டால் தயிர் புளிப்பின்றி அருமையாக இருக்கும்.

 இலையுடன் கூடிய காய்கறிகள் அதே ஃபிரஷ் ஆக இருக்க பேப்பரில் சுற்றி வைத்தால் போதுமானது.

 பச்சை பட்டாணியை வேகவைக்கும் போது சிறிதே வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

 உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது சிறிது வினிகர் சேர்த்து வேக வைக்கவும் .

பருப்பு வகையை களை சமைக்கும் போது சிறிதளவு பூண்டை சேர்த்தால் வாயு தொல்லை இருக்காது .

பூண்டை தண்ணீரில் போட்டு வைத்து பிறகு தோலை உரித்தால் எளிதாக உரிக்க முடியும்.

 ஊறுகாயுடன் சிறிது மஞ்சள் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 வேகவைத்த முட்டையை அதன் ஓட்டை அகற்றாமல் குளிர்ந்த நீரில் போட்டு பிறகு அதை பிரிட்ஜில் வைத்தால் இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும் .

மல்லி விதையை சிறிதளவு நெய்விட்டு வறுத்து பொடி செய்து வைக்கவும். சாம்பார் செய்து முடித்தவுடன் இந்த பொடியை அரை தேக்கரண்டி போட்டு மூடி வைத்தால் சாம்பார் நல்ல மணமாக இருக்கும்.

 இட்லி மிளகாய் பொடி அரைக்கும் போது சிறிது தேங்காய் கொப்பறையை சேர்த்து அரைக்க சுவை கூடும் .

பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய்யும் தயிரும் கலந்தால் பக்கோடா முறுமுறுவென இருக்கும்.

 சமைத்த உணவை ஃப்ரிஜில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு கெடாது. ஆனால் ஒரு முறை சூடு படுத்திய உணவை ஃப்ரிஜில் வைக்கக்கூடாது .

கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை ஐந்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் அடுத்த நாள் அப்படியே பயன்படுத்தலாம்.

ஃப்ர்ஜ் சமமான இடத்தில் வைக்க வேண்டும் மேடு பள்ளமாக இருந்தால் டோர் சீக்கிரமாக பழுதாகிவிடும் .

வாரத்துக்கு ஒரு முறை பிரிட்ஜை சுத்தமான நீரில் துணியை நினைத்து துடைத்து சுத்தம் செய்தால் போதும் துடைத்த பிறகு ஃப்ரிட்ஜில் பாதி எலுமிச்சம் பழத்தை வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

 குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா குழம்பு பதமாக வரும் .

சாம்பார் , பருப்பு கிழங்கு வகைகளில்  செய்த உணவுகள் , முட்டை உணவுகள் ஆகிவற்றை சமைத்த பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் குழம்பின் சுவையும், தரமும் மாறிவிடும்.

 பருப்பை வேகவைக்கும் போது ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்துவிடும்.

 உப்பை ஜாடியில் கொட்டும் போது ஒரு தேக்கரண்டி சோளமாவை கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது .

உளுந்த வடை செய்யும்போது மாவை உருட்டி எடுத்து அரிசி மாவை கைகளால் லேசாக தொட்டு பிறகு வடை தட்டி போட மேலே மொறு மொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

 எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை விட்டால் ஊறுகாய் துண்டுகளின் வடிவம் மாறாது.

 பழுக்காத தக்காளியை ஒரு பிரைன்லெட் பேப்பர் கவரில் போட்டு இருளான இடத்தில் வைத்தால் நன்றாக படுத்து விடும் .

தயிர் நன்றாக உரையாவிட்டால் தயிர் பாத்திரத்தை பெரிய பாத்திரத்தால் மூடி வைக்கவும்.

 மூன்று மணி நேரத்துக்குள் நன்றாக உறைந்து விடும் .

அடை மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு அதை உதிர்த்து உசிலி கறி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 சூப் கிரேவி ஆகியவற்றில் போட கிரீம் இல்லாவிட்டால் சிறிது பாலை எண்ணெயில் சேர்த்து கலந்து உபயோகிக்கவும்.

 சமையலுக்கு அடிகனமான அகலமான வாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரங்களை உபயோகிப்பதால் கேஸ் கணிசமாக சேமிக்க முடியும்.

 பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஓவனில் 35 வினாடிகள் வைத்து எடுத்தால் எளிதாக தோலை உரிக்க முடியும் .

கட்லெட் செய்யும்போது பொடியாக நறுக்கிய கீரையை கலந்து பிசைந்து பொறித்தால் சுவையும் ,சத்தும் அதிகமாகும் .

அதிக எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றி தேய்த்தால் பிசுக்கு போய்விடும்.

 ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அடை தோசை வடை மாவில் சிறிது சேர்த்தால் சேர்த்து செய்தால் மொமொறுப்பு கூடும்.

 காலிபிளவர், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது அரை தேக்கரண்டி இஞ்சி சாறை ஊற்றி செய்தால் ருசியாக இருக்கும்.

 சாம்பாரோ? ரசமோ ? கொதிக்கும்போது வாசனை வரவில்லை என்றால் அதில் உப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

 புளியை கெட்டியாக கரைத்து உப்பு சேர்த்து அதில் பச்சை மிளகாய் ஊறவிட்டு எடுத்து பின்னர் காய வைத்து எடுத்தால் எடுத்து பொறித்தால் மோர் மிளகாயை விட ருசியாக இருக்கும் .

பச்சை பட்டாணி மலிவாக கிடைத்தால் அதை உரித்து பிளாஸ்டிக் பையில் போட்டு வாய் இறுக கட்டி ஃபிரிட்ஜரில் வைத்தால் பல மாதங்கள் பச்சை மாறாமல் இருக்கும் .

 வெண்ணெயில் துள் உப்பை தூவி வைத்தால் நாள் பட்டாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 பால் பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரில் நன்கு அலசி விட வேண்டும்.

 உப்பு பாட்டிலின் அடியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பை கொட்டி வைத்தால் ஈரம் கசியாமல் இருக்கும் .
கிழங்குகளை உப்பு கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)