தேவையானவை
கடலை மாவு - அரைக்கப்
தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி - அரை இன்ச்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, தயிர், மிளகாய், இஞ்சி பேஸ்ட், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொண்டு அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு கடாயில் ஊற்றி மிதமாக சூடேற்ற கிரிம் பதத்திற்கு கிடைக்கும்.
இந்த பதத்தில் இருக்கும் போதே ஒரு தட்டில் கடலை மாவு கலவையை நன்கு பரப்பி கொள்ளவும் .
சூடு ஆறுவதற்குள் மேலே தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி விட்டு விடவும்.
சூடு ஆறும் தருவாயில் ஓரங்களில் ஒட்டாமல் தனியாக வரும்.
இவ்வேளையில் அப்படியே வெட்டி சுருளாக உருட்டவும்.
இந்த உருளைகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மேலே கொட்டி விடவும்.
சுவையான காந்தவி காரம் தயார்.