தேவையானவை
பன்னீர் துண்டுகள் - 10
சதுரமாக வெட்டிய வெங்காயம், தக்காளி பழம் - நான்கு துண்டுகள்
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
டிக்கா குச்சிகள் - தேவைக்கு ஏற்ப
கடலை மாவு - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
சோம்பு பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு , மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், சோம்பு பொடி, மிளகாய் தூள் , சிறிது உப்பு நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வெட்டிய பன்னீர் துண்டுகள், வெங்காயம், தக்காளியை இதில் முக்கி எடுக்கவும்.
டிக்கா குச்சியில் முதலில் பன்னீர் துண்டு, பிறகு தக்காளி , வெங்காயம் மீண்டும் பன்னீர் துண்டுகள் என நெருக்கமாக குத்திக் கொள்ளவும்.
இதே மாதிரி எல்லா குச்சிகளிலும் சொருகி கொள்ளவும்.
ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்கறி, பன்னீர் சுருகிய குச்சிகளை வரிசையாக அடுக்கி பொறிக்கவும்.
எல்லாப்புறமும் நன்கு பொரிந்த உடன் எடுத்து பரிமாறவும் .
இதை தணலில் நேரடியாக சுட்டும் சாப்பிடலாம்.