தேவையானவை
முட்டை - 5
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்னு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ரெண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ரெண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
வர மிளகாய் - 5
மிளகு - ஒரு டீஸ்பூன்
செய்முறை
முட்டையை வேக வைத்து உரித்து லேசாக கீரி வைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சிறிது நீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
அதில் அரைத்து வைத்துள்ள மசாலா தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஒரு நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.