சமையல் குறிப்பு

kuttybabuPPT
0
சமையல் குறிப்பு 

தேங்காய் துருவல், வாழைப்பழம் இரண்டையும் சேர்த்து அரைத்து ஆப்பம் மாவுடன் கலந்து ஆப்பம் சுட்டால் மிருதுவான சுவையான ஆப்பம் தயார்.

 ஃப்ரிட்ஜில் எலுமிச்சம் பழத்தை அப்படியே நேரடியாக வைக்காமல் ஒவ்வொரு பழத்தையும் நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தால் புதிது போலவே இருக்கும்.

 ஆப்பச்சட்டி மற்றும் பணியார சட்டிகளில் ஒரு நாள் முன்பே எண்ணெய் தடவி வைத்திருந்தால் எப்போதும் ஆப்பம் பணியாரம் செய்தாலும் ஒட்டாமல் எளிதாக இருக்கும்.

 வெல்லத்தை கட்டியாக வைக்காமல் தூள் செய்து கொண்டால் பயன்படுத்தும் போது சுலபமாக இருக்கும்.

 புளியை கரைத்து அது ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எளிதில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 ஊறுகாய் பாட்டலில் போடுவதற்கு முன்பு நல்லெண்ணையை இரண்டு ஸ்பூன் விட்டு பாட்டில் முழுக்க அது பரவும் படி செய்துவிட்டு ஊறுகாய் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

 வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது கடைசியில் கடலை மாவு கொஞ்சம் தூவி ஸ்டவ்வை சிம்மில் வைத்து கிளறி இறக்கினால் சுவை கூடும் .

மிக்ஸியில் பிளேடு கூர்மை இல்லாவிட்டால் அதில் சிறிதளவு கல் உப்பை போட்டு ஓட விட்டால் பிளேடு சரியாகிவிடும் .

பாயாசம் நீர்த்துப்போய்விட்டால் குலோப் ஜாமுன் மிக்ஸை பாலில் கரைத்து ஊற்றி நன்கு கலக்கவும். திக்காக இருக்கும் டேஸ்டாகவும் இருக்கும்.

 வறுத்த வேர்க்கடலையை பொடி செய் பொடியை வெண்டைக்காய் ஃப்ரை செய்யும்போது சிறிதளவு தூவி இறக்கினால் சுவை கூடும் .

இடியாப்ப மாவு பிசையும் போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டு கிளறி இடியாப்பம் செய்தால் சுவை கூடும். நல்ல வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

 கலந்த சாதம் செய்ய வடிக்கும் சாதத்தில் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டால் சாதம் குழையாமல் உதிரி உதிரியாக இருக்கும் .

ரசத்துக்கு கொத்தமல்லி இலை என்றால் தனியா நெய்யில் வறுத்து பொடி செய்து போட்டு விடலாம். வாசனையாக இருக்கும்.

 சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம் பழசாற்றை பிழிந்தாள் சாதம் வெண்மையாக இருக்கும்.

 அலுமினி பாத்திரத்தில் கறை படிந்து இருந்தால் அப்பாத்திரத்தில் தக்காளிப் பழம் போட்டு சமைக்க பாத்திரத்தில் படிந்துள்ள கரை போய்விடும்.

 கறுத்த புள்ளியில் சாம்பார் வைத்தால் சாம்பார் கருப்பாக இருக்கும் .அதற்கு சிறிது தேங்காய் பால் விட்டால் கருப்பு நிறம் மாறி சாம்பாரும் டேஸ்டாக இருக்கும்.

 வாழை இலையை சிறிது அனலில் காட்டி பிறகு அதை உணவு பார்சல் செய்ய பயன்படுத்தினால் உடையாது, கிழியாது.

 தேங்காய் உடைத்த தண்ணீரை ஊற்றி தயிர் சாதம் செய்தால் தயிர் சாதம் கூடுதல் சுவையாக இருக்கும்.

 பிரட்டில் வெண்ணை தடவுவதாக இருந்தால் வெண்ணெயுடன் சிறிது பால் கலந்து குழைத்துக் கொண்டு தடவினால் வெண்ணை ஒரே சீராக இருக்கும். சுலபமாக தடவ வரும்.

 வெங்காய பக்கோடா செய்ய மீதி வெங்காயத்தையும் இஞ்சியையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து அந்த விழுதை மாவில் கலந்து செய்தால் பக்கோடா நன்றாக இருக்கும்.

 நான் ஸ்டிக் பேனில் திரட்டுப்பால் செய்தால் பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியம் இல்லை. ஓரங்களில் ஒட்டாது .கொதித்து குறையும் அளவு கூட தெரியாது.

 சாதாரண பாத்திரத்தில் செய்வது விட 50 கிராம் அதிகமாகவே கிடைக்கும்.

 பொதுவாக எந்த ஊறுகாய் தாளித்தாலும் சிறிதளவு கடுகு எண்ணெயை காய்ச்சி ஊற்றி வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது .

பொறியலுக்கு போடும் தேங்காய் துருவல் லேசாக இருந்தால் சிறிது வறுத்தப்பின் பொரியலில் சேர்த்தால் பொரியல் அதிக நேரம் நன்றாக இருக்கும்.
 வாழைக்காய், பூ, தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மிகுந்த மனத்துடன் இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)