சைவ ஈரல் கருவேப்பிலை தொக்கு

kuttybabuPPT
0
சைவ ஈரல் கருவேப்பிலை தொக்கு
 தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு - 200 கிராம்

 சின்ன வெங்காயம் - 100 கிராம்

 தக்காளி - 150 கிராம் 

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

 மிளகாய் தூள் -  அரை டீஸ்பூன்

 தனியாத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு குழி கரண்டி

 கருவேப்பிலை -  ஒரு கைப்பிடி 

சோம்பு - ஒரு டீஸ்பூன் 

பட்டை - ஒரு சிறிய துண்டு 

லவங்கம் - 5 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

பாசிப்பயிரை நான்கு மணி நேரம் ஊற வைத்து கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

 வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .

தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

 வெந்ததும் தோலை உரித்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சோம்பு, பட்டை மற்றும் இலவங்கம் தாளித்து கொரகொரவென்று அரைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

 பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி தனியா தூள் சேர்த்து கிளறவும்.

 பிறகு சைவ ஈரல் துண்டுகளை போட்டு பிரட்டி அனலை குறைக்கவும்.

 அரைத்த தக்காளியை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி நன்கு வேக விடவும்.

 எண்ணெய் பிரிந்து வந்ததும் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
 சுவையான சைவ ஈரல் கருவேப்பிலை தொக்கு தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)