கேரட் சூப்

kuttybabuPPT
0
கேரட் சூப் 

தேவையானவை

கேரட் - மூணு 

பெரிய வெங்காயம் - ஒன்று

 இஞ்சி - சிறு துண்டு 

உப்பு - தேவைக்கு 

ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

 மிக்ஸட் ஹெர்பஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் 

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் 

பாதாம் பருப்பு - 3 

புதினா - சிறிதளவு 

செய்முறை 

வாணலியில் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.

 அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 தேவையான உப்பு :தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும்.

 வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு ஆற விடவும் .

ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த கேரட் விழுதை போட்டு வதக்கவும் .

ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும் .

கெட்டியாக வரும்போது மிக்செட் ஹெர்பஸ், மிளகுத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

 பாதாம் பருப்புகளை தோல் உரித்து பொடியாக நறுக்கி சூப்பில் போடவும்.

 புதினா இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

 மிக்சட் ஹெர்ப்ஸ் கிடைக்காவிட்டால் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து கலக்கலாம்.
 சுவையான ஹெல்த்தியான சூப் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)