தேவையானவை
காெர காெரப்பாக அரைத்த மிளகு - ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
பூண்டு பல் - 5
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் - இரண்டு
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாணலியில் நெய் விட்டு சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு பொடி , சுக்கு பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் .
பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள் .
சூப் கலவையை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்கு குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடி விடுங்கள்.
பின்பு மிதமான சூட்டில் வடிகட்டி பருகுங்கள்.
இப்போது மழைக்கு இதமான மிளகு சூப் தயார் .
பலன்கள்
மிளகு, பூண்டு சேர்த்து செய்யப்படும் இந்த சூப் அருந்தி வர மழைக்காலத்தில் ஏற்படும் சளி, கபம் பிரச்சனை, செரிமான கோளாறு போன்றவற்றிற்கு தீர்வாக இருக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி ஆரோக்கியமாக வைக்கும்.