தேவையானவை
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - ஏழு அல்லது எட்டு
கார்ன் - இரண்டு மேசைக்கரண்டி
பச்சை பட்டாணி - 2 மேசை கரண்டி
பால் - ஒரு கப்
பூண்டு - 2 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும் .
வெங்காயம், முட்டைக்கோஸ் ஆகியவற்றையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
பூண்டு இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி, பிரிஞ்சி இலை, உப்பு ஆகியவற்றை போட்டு மூடி நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி கார்ன், பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து தனியாக வேக வைக்கவும்.
வேகவைத்த உருளைக்கிழங்கு கலவையில் இருந்து பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு வெந்த உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்க்கலாம்.
பிறகு அதில் வேகவைத்த மற்ற காய்கறிகளையும் கலந்து மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
பலன்கள்
உடல் நலம் குன்றியபோது செரிமானத்தை சீராக்கி உடலுக்கு வலுவூட்டி நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி உடல் நலத்தை மீட்க காய்கறி சூப் உதவுகிறது.