வெந்தைய கீரை பொங்கல்

kuttybabuPPT
0
வெந்தைய கீரை பொங்கல்

தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்

 பாசிப்பருப்பு - அரை கப் 

ஆய்ந்து வேக வைத்த வெந்தயக்கீரை - ஒரு கப்

 பெரிய வெங்காயம் நறுக்கியது - ஒன்று

 தக்காளி நறுக்கியது - ஒன்று 

இஞ்சி - ஒரு துண்டு 

பொடியாக நறுக்கியது கருவேப்பிலை - சிறிது

 நெய் - ஒரு தேக்கரண்டி

 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

தாளிக்க 

மிளகு, சீரகம் தலா - ஒரு டீஸ்பூன்

 பட்டை - ஒரு துண்டு 

லவங்கம் - 2

 ஏலக்காய் -  2 

எண்ணை - ஒரு ஸ்பூன் 

நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்

 செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பை ஒன்றாக கழுவி போட்டு ஆறரை கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வேக விடவும் .

பாதி அளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கருவேப்பிலை சேர்த்து வேக விடுங்கள்.

 ஒரு வாணிலையை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் மிளகு, சீரகம் தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி வேகவைத்த வெந்தயக் கீரையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கீரையெல்லாம் நன்கு வதங்கியதும் பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள்.
 கம கம வெந்தய கீரை பொங்கல் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)