தேவையான பொருட்கள்
முறுக்கு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
தக்காளி - ஒன்று
ஓமப்பொடி - ஒரு கப்
சீஸ் துருவல் - ஒரு கட்
சட்னி தயாரிக்க
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தலை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
சட்னி தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
இந்த சட்னியை தனியாக எடுத்து வைக்கவும்.
சாண்ட்விச் தயாரிக்க வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கை தேர்ந்தெடுக்கவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவுக்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
முறுக்கின் மேல் முதலில் சட்னியை சிறிது அளவு தடவவும்.
பின்பு வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகிவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும்.
இந்த அடிக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கு கொண்டு மூடவும் .
பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாக தூவவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் முறுக்கு சாண்ட்விச் தயார்.